வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (15:23 IST)

வேடிக்கை பார்ப்பது வேதனையான விஷயம்- விஜயகாந்த்

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து , தஞ்சையில் தேமுதிகவினர்  நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு பாராட்டுக்களை விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் சமூக வலைதள   பக்கத்தில்,

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை மாபெரும் போராட்டமாக வெற்றி பெற செய்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என கூறி கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நமது விவசாயிகளுக்காக தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சிகளும் போராடாமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய விஷயம்’’என்று தெரிவித்துள்ளார்.
.