ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (10:27 IST)

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு; அடுத்தடுத்து பரபரப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் ஐடி ரெய்டு நடந்த நிலையில் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக வெளியான புகாரின் பேரில் சமீபத்தில் அவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை ரூ.2.51 கோடியாக காட்டப்பட்ட நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியில் இருந்தபோது 55% அதிகமான சொத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.