Daily Horoscope

சவால் விட்ட அண்ணாமலை! ஏற்றுக் கொண்ட திமுக எம்.பி! – காத்திருக்கு காரசார விவாதம்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:26 IST)
திமுகவினர் என்னுடன் விவாதிக்க தயாரா என பாஜக அண்ணாமலை விடுத்த சவாலை திமுக எம்.பி செந்தில் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இணைந்ததில் இருந்து திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் அண்ணாமலை தன்னுடன் திமுகவினர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள திமுக எம்பி செந்தில் குமார் இருவருக்கும் இடையேயான விவாதத்தை செய்தி சேனல்கள் யாராவது ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான விவாதத்தை காண இரு தரப்பினரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments