திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (07:34 IST)

டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் ஆழ்ந்து தூங்கிய விழுப்புரம் எம்பி ராஜேந்திரன்

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் அம்மாவட்டத்தின் எம்பி ராஜேந்திரன் தூங்கிய வீடியோ சமூக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி உயிரிழப்புகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் டெங்குவை ஒழிக்க அரசு போராடி வருகிறது
 
இந்த நிலையில் டெங்குவை ஒழிக்க ஆலோசனை கூட்டம் ஒன்று சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்தது. அமைச்சர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மிகவும் பொறுப்பாக டெங்கு ஒழிப்பு குறித்த விளக்கங்களை அளித்தார். ஆனால் இதை கவனிக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரோ தூங்கி வழிந்தனர். 
 
அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சரின் வரிசையில் உட்கார்ந்திருந்த விழுப்புரம் எம்பி ராஜேந்திரனும் தூங்கி வழிந்ததால் இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுக்க வந்திருந்த பத்திரிகையாலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எம்பியும், அதிகாரியும் தூங்கியதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
 
இந்த வீடியோ தற்போது வைரலாகி பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அரசு தூங்குவதை போலவே எம்பியும் அதிகாரியும் தூங்குவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.