Daily Horoscope
✕

காய்ச்சல் எங்களுக்கு இல்லை: உங்களுக்குதான்! – ஜெயக்குமாருக்கு ஜோதிமணி பதிலடி!

Written By Prasanth Karthick
Updated: சனி, 16 நவம்பர் 2019 (15:25 IST)
திமுக தேர்தல் காய்ச்சலில் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் எம்.பி ஜோதிமணி.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் விருப்ப மனு பெறுவதிலும், ஆட்களை தேர்ந்தெடுப்பதிலும் பிஸியாக உள்ளன. உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”திமுக தேர்தல் காய்ச்சலில் உள்ளது” என்று பேசியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது குறித்து பயந்து போயுள்ளதாக அவர் மறைமுகமாக கூறுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி ஜோதிமணி ” அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே தேர்தல் காய்ச்சல் அதிமுகவுக்குத் தான். 4ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த பயந்துகொண்டு, அதனால் தமிழக மக்களுக்கு வரவேண்டிய 11,000 கோடி ரூபாய் வராமல் முடங்கிக் கிடக்க அதிமுக அரசின் தேர்தல் காய்ச்சல் தான் காரணம்!” என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் என்றாலே கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழும். இந்நிலையில் தற்போது இந்த காய்ச்சல் கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments