ஆற்றில் மிதந்த சிறுமியின் சடலம்… காதலனோடு சேர்ந்து தாயே செய்த கொடூரம்!
தஞ்சாவூர் பகுதியில் சிறுமியைக் கொலை செய்த தாய் மற்றும் அவரின் காதலர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் விஜயலட்சுமி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் விஜய்லட்சுமிக்கு வெற்றிச்செல்வன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
ஆனால் தங்கள் வாழ்க்கைக்கு சிறுமி இடையூறாக இருப்பாள் என நினைத்து அவரை அடித்துக் கொன்று கல்லணை வாய்க்காலில் வீட்டுள்ளனர். இது சம்மந்தமாக உடலைக் கைப்பற்றிய போலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை தெரியவர அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.