தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே ரூ.1.42 கோடி பணம் பறிமுதல்! சென்னையில் பரபரப்பு
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.
அதுமட்டுமின்றி தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டதால் உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் 1.42 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை யானைகவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் ஹவாலா பண பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அதிரடியாக போலீசார் சோதனை செய்ததில் ரூ.1.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அங்கிருந்த மூன்று பேரை காவல்துறையினர் விசாரணை செய்து அதன் பின்னர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் அந்த இடத்தின் உரிமையாளர் தந்த தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva