பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!
இன்று பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று நாட்களாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் தற்போது பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Mahendran