1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

முக ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்: பிரச்சாரத்தையும் தொடங்க திட்டம்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும்பணி மற்றும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன 
 
இந்த நிலையில் இன்று தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதனை அடுத்து அவர் தனது தந்தை பிறந்த ஊரான திருவாரூரிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்
 
இன்று முதல் அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்வார் என்றும் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில் இன்று அவரும் தனது எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது