செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (12:54 IST)

அதிமுக கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் அதிகமாக வேளாண்மையை சார்ந்திருக்கும் பகுதிகளான காவிரி டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “மாநிலத்தின் 38% விவசாய உற்பத்தி டெல்டா விவசாய பகுதிகளில்தான் நடைபெறுகிறது. அதனால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அமல்படுத்துகிறோம். வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த தொழிற்சாலையையும் திமுக அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.