புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மே 2022 (11:06 IST)

ஒரு பிச்சக்காரனுக்கு இவ்ளோ சம்பாத்தியமா? – வடிவேலு காமெடி பாணியில் உண்மை சம்பவம்!

Beggar Vadivelu
திருப்பூர் மாவட்டத்தில் கடை உரிமையாளர் ஒருவரை பிச்சை எடுக்கும் இளைஞர் பிச்சை எடுக்க அழைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்றாடம் சாலைகளில், கோவில் வாசல்களில் பலர் பிச்சையெடுக்கும் நிலையில் மக்களும் தர்மம் செய்வதாக தங்களால் முடிந்த பணத்தை கொடுக்கின்றனர். ஆனால் சில திரைப்படங்களில் பிச்சைக்காரர்கள்தான் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்பது போன்ற காமெடிகள் கூட இடம்பெற்றுள்ளன.

தற்போது அந்த காமெடியை எல்லாம் மிஞ்சும் வகையில் நிஜ சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கடைவீதியில் ஒரு இளைஞர் சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு கடை கடையாக பிச்சை எடுத்து சென்றுள்ளார்.
Beggar Tirupur

அப்போது சைக்கிள் ஸ்பேர் விற்கும் கடைக்கு சென்று அவர் பிச்சை கேட்டபோது அந்த கடை உரிமையாளர் “ஆள் நன்றாகதானே இருக்கிறாய். என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன்” என கூறுகிறார். அதற்கு அந்த பிச்சைக்கார இளைஞர் எவ்வளவு தருவீர்கள் என கேட்க, அதற்கு கடை உரிமையாளர் தினமும் 400 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பிச்சைக்காரர் “நான் தினமும் பிச்சை எடுத்து ரூ.2000 சம்பாதிக்கிறேன்” என்று கூறியுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர் ‘இப்படி ஓசியில் பணம் கொடுத்தால் நீ சம்பாதிக்கதான் செய்வாய்” என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.