செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (11:00 IST)

தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

 
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! என பதிவிட்டுள்ளார்.