Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள் முதல்வனாக வரவேண்டும்! – “நான் முதல்வன்” திட்டம் தொடக்கம்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 1 மார்ச் 2022 (10:51 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று “நான் முதல்வன்” என்ற மாணவர்களுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் ”நான் முதல்வன்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “எனது பிறந்தநாளில் எனது கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் கல்லூரி பட்டத்தை தாண்டிய தனித்திறமை கொண்டிருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும், திறமையும் பெற்று அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

75 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்த அதிபர் டிரம்ப்.. தடையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்...

மாணவியிடம் சிரித்து பேசிய மாணவன்.. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு..

இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து தேர்தலுக்கு பின் முடிவு: நிர்மல் குமார்

கேரளாவில் தவெகவுக்கு பலம் சேர்க்கும் நடிகர் தேவன்? விஜய்யை சந்திக்கிறார்!

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments