1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (09:43 IST)

அர்ஜூன் அம்மா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் அர்ஜுன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
நடிகர் அர்ஜூனின் அம்மா லட்சுமி தேவி காலமானார். இவர் மைசூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு அர்ஜூன் உள்ளிட்ட 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் கன்னட சினிமாவில்  பிரபல இயக்குனர் ஆவார். இவரது கணவர் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஆவார்.

நடிகர் அர்ஜூனின் தாயார் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, நடிகர் அர்ஜுனின் தாயார் திருமதி. லட்சுமி தேவி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.