செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:54 IST)

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு: முதல்வர் ஸ்டாலின்..!

Stalin
இன்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின்2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு என தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்றும், சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
மேலும் அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர், எனவே அமைச்சர்கள் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை கூறினார்.
 
தொடர்ந்து 10 தேர்தலில் வெற்றி பெற்று உள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் என்றும் அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்திருக்கிறோம் என்றும் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்
 
Edited by Mahendran