1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:12 IST)

50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கால நண்பர்களை சந்தித்த ஸ்டாலின்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை எதிர் கொள்வதில் மிகுந்த பிசியாக இருந்த போதிலும் தனது பால்ய நண்பர்களைச் சந்திக்கவும் சில மணிநேரம் ஒதுக்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின் இன்று தனது பள்ளி நண்பர்களை முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
 
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டின் பள்ளியில் கடந்த 1970ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்த நிகழ்வு ஒன்று இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடன் படித்த சக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் அவர் விளையாட்டு மைதானத்தை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து அவர் வலம் வந்து தனது மலரும் நினைவுகளை தனது நண்பர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்
 
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் மற்றும் பிற பணிகளுக்கு இடையே தனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்க அவர் சில மணி நேரங்களை ஒதுக்கியதால் அவரது பள்ளிக்கால நண்பர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது