வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (13:30 IST)

வியர்வை சிந்தி விதைத்தது அறுவடையாகும் நாள், கவனமாக இருங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

MK Stalin
இத்தனை நாட்களாக வியர்வை சிந்தி உழைத்தது அறுவடையாகும் நாள்தான் தேர்தல் நாள் என்றும் அன்றைய தினம் திமுக நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வெற்றி உறுதியாகும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
வியர்வை சிந்தி விதைத்த அனைத்தும் அறுவடை ஆகும் நாள் வாக்குப்பதிவு நாள் தான் என்றும் 39 பொது பார்வை ஆறுகள் 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுவோம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
Edited by Mahendran