வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:35 IST)

பாஜகவின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்துங்கள்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகளின் சீரழிவு அரசியலை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமென தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்திட பொய்யை மட்டுமே சொல்லிவரும் அதிமுகவால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள்.  நல்லிணக்கமாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பாழ்ப்படுத்த நினைப்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள், மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.