திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மே 2020 (12:40 IST)

குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாதவர்கள் என்பதை மாற்றுங்கள் – அரசுக்கு ஸ்டாலின் அறிக்கை!

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவபணிகளில் ஈடுபட்டு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசின் தொய்வான நடவடிக்கைகளால் மேலும் நோய் தொற்று பரவுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிக நேரம் பணி புரிவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பேரிடர் காலங்களில் அவர்களது அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயல்” என கூறியுள்ளார்.

மேலும் “குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாத அரசு என்ற குற்றச்சாட்டையாவது குறைந்த பட்சம் மாற்றி பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாக குப்பைகளை அகற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்து கழிவுகள் அறிவியல்புர்வமாக அகற்றப்பட்டன என்பதை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என கூறியுள்ளார்.