திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (06:42 IST)

நானும் சொல்வேன் 'பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக', சோபியா கைதால் ஸ்டாலின் ஆவேசம்

நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்ற போது அவரது அருகில் உட்கார்ந்திருந்த சோபியா என்ற இளம்பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தூத்துகுடி விமான நிலையம் வரை தொடர்ந்தது.

இதனையடுத்து தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை கைது செய்த போலீசார் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சோபியாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்

இந்த நிலையில் சோபியா கைது செய்யப்பட்டதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கைது நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் டு்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூ'றியிருப்பதாவது:

“ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!. அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?. நானும் சொல்கின்றேன்! பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டுள்ளார்.