1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (09:59 IST)

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு நினைவு இல்லம்: ஸ்டாலின் ஏளனம்!

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை திறப்பது குறித்து ஸ்டாலின் விமர்சனம். 

 
ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையம் இன்று திறக்கப்பட உள்ளது என்பதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இந்த நிலையத்தை திறக்க உள்ளார் என்பதும் இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கவிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது பின்வருமாறு... 
 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது. விசாரணையை கேட்டவரே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ஆனால் அவருக்கு ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர் என்றார்.