செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 மே 2021 (21:31 IST)

தன் தாயிடமும், எதிர்வீட்டிலும் ஆசீர்வாதம் பெற்ற மு.க ஸ்டாலின்

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே விரைவில் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில்,முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் அவர்களிடம் ஆசி பெற்றார்.அங்கு அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தன் வீட்டிற்கு எதிரே உள்ள நண்பர்களின் வீடு என்ற முறையில் அங்கு சென்று அனைவரிடமும் நலம் விசாரித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.