1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (14:03 IST)

மேகதாது விவகாரம் குறித்து ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசினரா?

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சென்று நேரில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்றபின் முதன்முறையாக இன்று குடியரசு தலைவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 
 
இதனைத்தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டை குடியரசு தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஓரிரு நாட்களில் விழாவின் தேதி முடிவு அறிவிக்கப்படும் என கூறினார். 
 
மேலும், 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.