செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (14:41 IST)

செப்டம்பர் 5ஆம் தேதி அமைதி பேரணி: களமிறங்கிய அழகிரி

வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப்போவதாகவும் அதில் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை கட்சியில் சேர்ப்பதாக இல்லை என்று ஸ்டாலின் முடிவொடு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி தனது ஆதங்கத்தை விரைவில் அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
 
அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அழகிரி கூறியதாவது:-
 
கருணாநிதி நினைவிடத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள். 
 
கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள் என்பதை நீருபித்து காட்டுவேன். தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் கூற முடியாது. அவர் எப்படி நினைத்தாரோ அப்படி செயல்படுவேன் என்று கூறினார்.