திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி....!

குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி  மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும்  பயன்படுகிறது.
இதன் சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும் தீரும். வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல் ஒன்றாய் காய்ச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.
 
மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில் 2-5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை சாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும்  குணமாகும் மோரில் சாப்பிட வேண்டும். புளி, காரம் உணவில் சேர்த்து கொள்ளாவிட்டால் விரைந்து குணமடையும்.
 
குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
 
குப்பைமேனிச் சாற்றில் சுண்ணாம்பு கலந்து, நாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.
 
ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
 
குப்பைமேனி இலையின் பொடியை மூக்கில் பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர்.
 
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி, சிரங்கு, படை குணமடையும்.
 
எல்லா வகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.