செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (15:57 IST)

அழகிரி பொறாமையில் பொங்குகிறார் - ஜெ.அன்பழகன்

திமுகவில் இருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட அழகிரி பொறாமையால் ஸ்டாலினை விமர்சிக்கிறார் என்று ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்து டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து போட்டியளித்த அழகிரி, 
 
ஸ்டாலின் செயல் தலைவராக உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற வேண்டும். அதை தினகரன் செய்தார். அவரது குழு நன்றாக களப்பணி ஆற்றினார்கள். அதனால் அவர் வெற்றி பெற்றுள்ளார். 
 
ஸ்டாலினுடன் கூட இருப்பவர்கள் சரியில்லை. அதனால்தான், தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணநாயகம், ஜனநாயகம் என பேசுகிறார்கள் என்று கூறினார்.
 
இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அழகிரி கூறியதற்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
திமுகவில் இருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட அழகிரி பொறாமையால் ஸ்டாலினை விமர்சிக்கிறார். திமுக மீது அழகிரிக்கு அக்கறை இருந்தால் முன்பே கருத்து கூறியிருக்க வேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.