மிசோரம் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு!

Written By Sinoj
Updated: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:20 IST)
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.

இதில், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய அனைத்து மாநிலங்களில் வாக்குப்பதிவு  நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  வாக்குப் பதிவு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த  நவம்பர் 7 ஆம் தேதி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments