செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (19:28 IST)

அமைச்சர்களுடன் 2ஆம் கட்ட ஆலோசனை: முதல்வர் ஈபிஎஸ் வீட்டில் பரபரப்பு

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து இன்று காலை முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளுக்கு அமைச்சர்கள் மாறி மாறி பயணம் செய்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர் 
 
இரு தரப்பினரிடையேயும் அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது அமைச்சர்களுடன் இரண்டாம் கட்ட ஆலோசனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அமைச்சர் சிவி சண்முகம், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த ஆலோசனை இன்னும் ஒரு சில மணி நேரத்திற்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது
 
காலை முதல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் என அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதால் இரு தரப்பினரிடையே இன்னும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்பதையே நிரூபிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் நாளை முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற பரபரப்பு அதிமுக தொண்டர்கள் இடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது