செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (13:37 IST)

அதிமுக vs தேமுதிக: முடிக்கப்பார்கும் பிரேமலதா, பூசி மொழுவும் ஜெயகுமார்!

எங்களை விட்டு யாரும் போகமாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது என அமைச்சர் ஜெயகுமார் கருத்து. 
 
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் அவரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா அளுநர் தமிழிசை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்” என கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து விரைவில் கட்சி செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
 
கூட்டணியில் உள்ள அதிமுக மாநிலங்களவை பதவியில் தேமுதிகவிற்கு வாய்ப்புகள் வழங்காத அதிருப்தியில் தேமுதிக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் முன்னதாகவே பேச்சு எழுந்திருந்த நிலையில், தற்போது பிரேமலதா இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே தேமுதிகவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், கூட்டணியில் சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அது சரியாகிவிடும். எங்களை விட்டு யாரும் போகமாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.