திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (09:03 IST)

எக்ஸ்இ வகை வைரஸ் உருவாகுவது எப்படி?

எக்ஸ்இ வகை வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்  அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான ”எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவிய ஆரம்ப கட்டத்தில் ஆல்பா, பீட்டா, காமா, கப்பா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகை உருமாற்றம் அடைந்தது. அதில் டெல்டா வகை வைரஸ்தான் கடுமையான பாதிப்பை கொடுத்தது. கடைசியாக ஒமைக்ரான் வந்தது.
 
ஏற்கனவே 7 வகையான உருமாறிய நிலையில் இப்போது ஒமைக்ரான் வைரசில் இருந்து பி.ஏ.-1, பி.ஏ.-2 என்ற மேலும் 2 வகை வைரஸ் உருவாகி இருக்கிறது. பி.ஏ.-1, பி.ஏ.-2 ஆகிய இரண்டு வைரஸ்களும் ஒரே நபரின் உடலில் தொற்றினால், அவை இரண்டும் இணைந்து உருவாக்குவதுதான் இந்த ‘எக்ஸ்இ’ வகை வைரஸ்.
 
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தொற்றும், இறப்பும் உச்சத்தில் இருந்தது. இப்போது தொற்று 50-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சாவு இல்லை. மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.