அண்ணாமலை மத்திய அரசிடம் வாங்கி தரட்டும்... அமைச்சர் பேச்சு!
பாஜக சார்பில் வருகின்ற 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.2,079 கோடி வழங்குமாறும், அதில் ரூ.550 கோடியை உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 ரூபாய் வழங்க வேண்டி தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் வருகின்ற 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனவும் தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசிடம் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 5000 ரூபாய் வாங்கி கொடுத்தால், அதை மக்களிடம் கொடுத்து விடுவோம் என்றும் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கணக்கீடு செய்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.