வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (12:36 IST)

போக்குவரத்து தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை: உடன்பாடு ஏற்படுமா? போராட்டம் தொடருமா?

ss siva shankar stalin
போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை பேச்சு வார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ள நிலையில் நாளைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது  மீண்டும் போராட்டம் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  
 
ஊதிய உயர்வு,  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்  
 
ஆனால் பொங்கல் திருவிழாவின் போது போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசிய போது போக்குவரத்து தொழிலாளர்களுடான  நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran