புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:57 IST)

வழக்குகள் இல்லாத அரசியல்வாதியே கிடையாது! ஸ்டாலின் உட்பட! – செல்லூர் ராஜு

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது வழக்குகள் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில் “வழக்கு இல்லாத அரசியல்வாதியே இல்லை” என பதிலளித்திருக்கிறார் அதிமுக அமைச்சர்.

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் ”அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படிப்பட்டவருக்கா வாக்களிக்க போகிறீர்கள்” என்ற ரீதியில் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு “அதிமுக ஆட்சிக்காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு வழக்கு இருந்தது. அரசியல்வாதிகள் என்றாலே வழக்கு இருப்பது சகஜம்தான்” என கூறியுள்ளார்.