1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (10:07 IST)

எங்க கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? சீமான் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

sekhar
வங்கக்கடலில் கருணாநிதியின் பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த நிலையில் எங்கள் கைகள் என்ன அப்போது பூ பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச்சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்த போது அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் சீமான் பேனா சிலை வைத்தால் அதை உடைத்து எறிவேன் என்று கூறியிருந்தார்.
 
இது குறித்து இன்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ எங்கள் கைகள் என்ன பூ பறித்துக் கொண்டிருக்குமா? கை அவருக்கு மட்டும் தான் இருக்கின்றதா என்று கூறினார். இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva