திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (13:41 IST)

ஏரி காத்த ராமர் போல் சென்னையை காத்தவர் நமது முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு..!

மதுராந்தகம் ஏரியை காத்தவர் என்று ராமரை சொல்லுவார்கள். அதுபோல் சென்னை காத்தவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசிய போது  தனது தூக்கத்தினால் ஏராளமான உயிர்களை வழி கொண்ட அரசியல்வாதிகள் இருக்கும் நிலையில் தனது தூக்கத்தையே பொருள்படுத்தாமல் இரவும் பகலமாக சென்னை மக்களை காப்பதில் ஈடுபட்டவர் நமது முதல்வர் என்று சேகர் பாபு தெரிவித்தார். 
 
மதுராந்தகம் ஏரியை காத்தவர் என்பதால் தான் ஏரி காத்த ராமர் என்று அவருக்கு பெயர் ஏற்பட்டது. அதேபோல் சென்னை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தவர் நமது தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது என்று தெரிவித்தார்.  அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran