300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு! – அமைச்சர் சேகர் பாபு தகவல்!
சென்னையில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை கீழ்பாக்கத்தில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இந்த நிலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஆன்மிகம் என்ற பெயரில் ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.