திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (09:46 IST)

தமிழக பக்தர்களில் தேவைக்காக சபரிமலையில் அதிகாரிகள்! – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் பலர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு மாலை போட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சபரிமலை செல்லும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் தேவையை கவனிக்க கேரள அரசின் ஒத்துழைப்புடன் சபரிமலையில் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சன்னிதானத்தில் இவர்கள் பணியில் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.