வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

அமைச்சர் சாமிநாதன் கயல்விழி தலைமையில் 19 மீனவர்களுக்கு 4.50 லட்சம் மதிப்பீட்டில் மானிய விலையில் மீன் விற்பனை வாகனம் வழங்கும் விழா!

திருப்பூர் மாவட்டம். தாராபுரம் நகராட்சி, சின்னக்கடைவீதியில்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தினை
செய்தித் துறை அமைச்சர் ம.பெ.சாமிநாதன், மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
 
அப்போது பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி......
 
மீன்வளத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியத் தொகை ரூ.30,000/- வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பெண்கள் பிரிவில் 2 மீனவ மகளிருக்கும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியின பிரிவினைச் சார்ந்த 2 பயனாளிகளுக்கு 40 மற்றும் 60 சதவீத மானியத்தில் ரூ.45,000/- வீதம் ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 19 மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் மீன் வியாபாரம் மேற்கொள்ள ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில்
கூட்டுறவு சங்கங்களின்
தலைவர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-மண்டலத்தலைவர்
இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தாராபுரம்.ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார். துணைப்பதிவாளர்
செ.பழனிச்சாமி, மீன் வள ஆய்வாளர் திருமதி ரெஜினா ஜாஸ்மின்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்