1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (18:37 IST)

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்... இதுதான் ஸ்டாலின் பாலிசி!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
உள்ளாட்சி தேர்தலுக்காக விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பிரச்சாரத்தில் அவர் பேசிய சில சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, 
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் ஒரு நிலைப்பாட்டோடு மக்களிடம் பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். ஸ்டாலினைப் பொருத்தவரை எரிந்த வீட்டில் புடுங்க வேண்டும் என்று நினைப்பவர். மொழிப் பிரச்சனை இனப்பிரச்சினையை தூண்டிவிட வேண்டும் என்கிற எண்ணம் காலங்காலமாக அவருக்கு இருக்கிறது. 
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார். அந்த மாநிலத்தில் தீவிரவாதத்தை உருவாக்குகிறார். இதுபோன்ற முதலமைச்சர் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் அந்த மாநிலம் சுடுகாடாகிவிடும்.
 
உள்நாட்டுக் கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்றுதான் ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற தகவல் எனக்கு வந்துள்ளது.  இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.