1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (07:36 IST)

தீபாவளிக்கு 16,000 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தீபாவளி திருநாள் அடுத்த வாரம் வியாழன் அன்று பொதுமக்கள் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே இருந்து வரும் பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் ஆகியவற்றில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன் பதிவு செய்யாதவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தபோது குறிப்பிட்டுள்ளார். 
சென்னை மற்றும் புறநகர்களில் மொத்தம் ஆறு இடங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கண்ணப்பன் தகவல் செய்துள்ளார்
 
ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் முன்பதிவு சமீபத்தில் தொடங்கிய நிலையில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து வசதிகளை தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.