1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (12:07 IST)

தீபாவளிக்கு பயணம் செல்ல 30,000 பேர் முன்பதிவு

நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பயணம் மேற்கொள்ள 30,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

 
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்கள் சொத்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயம் சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் செயல்படும். 
 
இந்நிலையில் இது வரையில் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பயணம் மேற்கொள்ள 30,000 பேர் இன்று காலை நிலவரப்படி முன்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.