மரத்தின் மேல் மாணவர்கள்; செல்போன் டவர் அமைக்க முடிவு! – அமைச்சர் தகவல்!
ராசிபுரம் அருகே கிராமத்தில் மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் தவித்த நிலையில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாய் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது அமர்ந்து படித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி ராசிபுரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேசி வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.