Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி என்ன பொறியியல் பட்டதாரியா சிஸ்டம் சரியில்லை என சொல்ல!

Updated: சனி, 10 பிப்ரவரி 2018 (11:59 IST)
தமிழக அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக கூறிவரும் குற்றச்சாட்டு, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அதை முதலில் சரிசெய்ய வேண்டும் என்பது தான்.
 
இந்நிலையில் ரஜினியிடம் இந்தியாவின் சிஸ்டம் சரியில்லையா, தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லையா என மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தான் சிஸ்டம் சரியில்லை, அதைத்தான் முதலில் சரி செய்ய வேண்டும் என்றார்.
 
இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார் எனத் தெரியவில்லை. எனவே அதனை ரஜினி முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறுவார்கள், ரஜினி பொறியியல் பட்டதாரியா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.
 
மேலும், வட மாநிலங்களில் தீவிரவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ரஜினி அங்கு சென்று சிஸ்டத்தை சரி செய்யட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments