1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (15:25 IST)

சசிகலாவ பத்தி பேச எதுமே இல்ல... ஜெயகுமார் கறார்!!

அமைச்சர் ஜெயகுமார் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை என விளக்கம்.
 
சசிகலா வெளியே வந்தால் அதிமுகவிற்கு பெரிய சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பினர் சசிகலா வரவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தற்போது இதற்கு மாற்று கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.  
 
ஆம், அன்வர் ராஜா, சசிகலா வெளியே வந்து அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் அதிமுக மீதும் இந்த தாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சசிகலா விடுதலை குறித்து ஆலோசிக்கப்பட்டது என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் ஜெயகுமார் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.