1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (12:56 IST)

ஓபிசி-க்கு இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு என்ன செய்யும்? ஜெயகுமார் ஆருடம்!

மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மதிக்கும் என நம்புவோம் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் எவ்வித தடை இல்லை என தீர்ப்பு அளித்தது. 
 
இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளதாவது, மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படதாதை எதிர்த்து அதில் நாம் இவ்வழக்கு தொடுத்திருந்தோம். இந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பின்படி குழு அமைத்து மூன்று மாதத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
அருமையான ஒரு தீர்ப்பாக இருக்கிறது என்றும் இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக கருதி பாராட்டுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.