டோக்கன் மன்னன் தான் அந்த வேலையல்லாம் செய்வாரு - தினகரனை சீண்டும் ஜெயக்குமார்
ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என அமித்ஷா கூறியதற்க்ய், டோக்கன் மன்னன் தினகரன் தான் அந்த வேலையைன் எல்லாம் செய்வார் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மீன்களில் ரசாயனம் கலப்பதாக பரவு வதந்தி பொய் எனக் கூறினார்.
மேலும் நேற்று சென்னைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். இந்தியாவிலே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றார். தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்தும் ஒழிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஜெயக்குமார் மலுப்பலாக பதிலளித்தார். அமித்ஷா தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது நடக்கும் ஊழலை பற்றி பேசி இருப்பார். திமுக தான் ஊழல் செய்பவர்கள், மேலும் டோக்கன் மன்னன் தினகரன் தேர்தலின் போது செய்த தில்லாலங்கடி வேலைய மனதில் வைத்து தான் அமித்ஷா இப்படி கூறியிருப்பார் என திமுகவையும், தினகரனையும் தாக்கும் விதமாகவும் பேசினார். அமித்ஷா அதிமுகவை தான் இப்படி கூறுனார் என்பதை தெரிந்தும், அதனை தெரியாதது போல் மழுப்பி பேசினார் அமைச்சர் ஜெயக்குமார்.