1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (20:33 IST)

ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சரின் சூப்பர் விளக்கம்...

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில குளறுபடி நடப்பதாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 
 
அதிலும், மக்களின் புகைப்படங்களுக்கு பதில் வேறு புகைப்படங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்ப்டுத்தியது. அதிலும், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றது சர்சைக்குரிய ஒன்றானது. 
 
இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ளார் உணவு துறை அமைச்சர் காமராஜ், ஸ்மார்ட் கார்டு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தை தாங்களே பதிவேற்றிக்கொள்ளலாம் என கூறி, மொபைல் ஆப்பிலிருந்து புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்னோம். அப்போது நடைபெற்ற குளறுபடிதான் இது. இதற்கும் அரசிற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. 
 
மேலும், இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதால் தற்போது எவ்விதக் குளறுபடியும் நடைபெறவில்லை. இதுவரை ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கும் பணி 99 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.