செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:11 IST)

ஜால்ரா போட்டா தான் வேலை ஆகும்: அதிமுக - பாஜக குறித்து அமைச்சர் பளிச்!!

நாங்கள் பாஜகவை ஆதரித்ததால் 11 மருத்துவக் கல்லூரிகள்  தமிழகத்திற்கு வந்துள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 
 
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துக்கொண்டார் அப்போது அவர் சர்ச்சைக்குறிய வகையில் சிலவற்றை பேசினார். 
 
அவர் பேசியதாவது, குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு?  நாங்கள் பாஜகவை ஆதரித்ததால் 11 மருத்துவக் கல்லூரிகளை எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்காக பெற்றுள்ளார். அதில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வந்திருக்கிறது. 
 
இதற்கு மாண்புமிகு நரேந்திர மோடியோடு நாங்கள் இணக்கமாக செல்வது தான் காரணம். இதை நாங்கள் சொன்னால் பத்திரிக்கையில் ஜால்ரா அடித்ததனால் தான் கிடைத்தது என்கிறார்கள். 
 
இப்போதும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எங்காவது குண்டு காயம் ஏற்பட்டு, செத்தாங்க போனாங்கன்னு ஏதாவது செய்தி வருதா போகுதா? அதுவே எங்காவது கற்பழிச்சான் போனான் வந்தான்னா அது காலங்காலமாக நடப்பது தான் என சர்ச்சையாக பேசியுள்ளார்.