வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (19:19 IST)

திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்: பெரும் பரபரப்பு

திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியா முழுவதும் காவி சாயம் பூச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாஜக மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் தமிழக பாஜகவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பதிவு செய்த ஒரு புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில் வெளியிட்டு அதன் பின் பிரச்சனை காரணமாக அதனை டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள கருங்காலி குப்பம் என்ற பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளை பெயிண்ட் தான் அடித்து இருந்த நிலையில் தற்போது திடீரென காவிச்சாயம் பூசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது உள்ளூர் பாஜகவினர் வேலைதான் என அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்