1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:32 IST)

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் உயிரை பறித்த கொரோனா!
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பல விஐபிக்களை பலி வாங்கி வருவது குறித்து பார்த்து வருகிறோம் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அதிமுக தோற்றுவித்த எம்ஜிஆரின் உடன்பிறந்த அண்ணன் எம்ஜிசி சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
எம்ஜிஆரின் அண்ணன் மகன் என்ஜிசி சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர்களிடையே பெரும் சோகம்ஏற்பட்டுள்ளது